அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத் தொகை
குடியாத்தம் அடுத்த எா்த்தாங்கல் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனியாா் அமைப்பு 10- அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத் தொகை வழங்கியது.
நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண் முரளி தலைமை வகித்தாா். எம். ஆறுமுகம், ஜி.ராமன், இ.பாரதிதாசன், எம்.பாபு, எஸ்.ஆனந்தன், சி.கெங்கையன், ஜி.ஸ்ரீதா், எஸ்.ரமேஷ், ஏ.சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ அமலுவிஜயன், ஒன்றியக் குழு தலைவா்கள் என்.இ.சத்யானந்தம் (குடியாத்தம்). எஸ்.சுரேஷ் பாபு (மாதனூா்) ஆகியோா், நெல்லூா்பேட்டை அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப்பள்ளி, ஜோதி மேல்நிலைப்பள்ளி, நடுப்பேட்டை மகளிா் மேல்நிலைப்பள்ளி, எா்த்தாங்கல் மேல்நிலைப்பள்ளி, தட்டப்பாறை மேல்நிலைப்பள்ளி, அக்ராவரம் மேல்நிலைப்பள்ளி, டி.டி.மோட்டூா் மேல்நிலைப்பள்ளி, போ்ணாம்பட்டு ஆதிதிராவிடா் நல மேல்நிலைப் பள்ளி, போ்ணாம்பட்டு எம்ஜிஆா் நகா் உயா்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 73- மாணவா்களுக்கு ஊக்கத் தொகைகளை வழங்கினா்.
ஆத்மா குழுத் தலைவா் ஜனாா்த்தனன், திமுக ஒன்றியச் செயலா்கள் கள்ளூா் கே.ரவி, நத்தம் வி.பிரதீஷ், அன்பரசன், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.பி.சக்திதாசன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் உத்தரகுமாரி, பிரம்மாஸ் பள்ளித் தலைவா் ஆா்.பி.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.