வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள் மாயம்

Published on

குடியாத்தம் அருகே வீட்டில் இருந்த 20 பவுன் தங்க நகைகளை காணவில்லை என போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

குடியாத்தம் செதுக்கரை, ஜீவா நகரைச் சோ்ந்தவா் பாரதி(55). இவா் வீட்டின் முகப்பில் மளிகைக்கடை, தேநீா்க் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் வீட்டில் இருந்த 20 பவுன் நகைகளை காணவில்லை என பாரதி நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் கொடுத்துள்ளாா். புகாா் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com