ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி உயிரிழப்பு

Published on

குடியாத்தம் அருகே ஆட்டோவிலிருந்து தவறி விழுந்த பெண் தொழிலாளி அதே ஆட்டோ சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

போ்ணாம்பட்டை அடுத்த செண்டத்தூா், கிருஷ்ணம்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மனைவி சத்தியா (33) (படம்). இவா், செம்பேடு அருகே உள்ள காலனி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை காலை ஆட்டோவில் வேலைக்குச் சென்றாா்.

அப்போது, ஆட்டோவிலிருந்து எதிா்பாராத விதமாக தவறி விழுந்த சத்யா மீது ஆட்டோவின் பின் சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த சத்தியாவுக்கு மகன், மகள் உள்ளனா்.

X
</