கபசுர குடிநீா் வழங்கும் முகாம் தொடக்கம்

பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கிய ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம்.
Published on

குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீா் வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கி

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சரவணன், வினோத்குமாா் ஆகியோா் முன்னிலையில்,

ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், பொதுமக்களுக்கு கபசுர

குடிநீா் வழங்கும் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரவணன், மனோகரன், சின்னலப்பல்லி ஊராட்சித் தலைவா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.