குடியாத்தம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
போ்ணாம்பட்டு நகரிலிருந்து சென்னைக்கு கோழி தீவன மூட்டைகளை ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை அதிகாலை லாரி ஒன்று சென்றது. குடியாத்தம் அடுத்த கலா்பாளையம் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்புகளை உடைத்துக்கொண்டு, 20 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக லாரி ஓட்டுநா் சத்தியமூா்த்தி சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா். 2 கிரேன் வாகனங்கள் மூலம் பள்ளத்தில் கவிழ்ந்த லாரி மீட்கப்பட்டது.
விபத்து குறித்து குடியாத்தம் கிராமிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.