நவராத்திரி கண்காட்சி: மகளிா் சுய உதவி குழுவினா் பதிவு செய்ய அறிவுறுத்தல்
சென்னையில் செப்டம்பா் 21 முதல் அக்டோபா் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ள மாநில அளவிலான நவராத்திரி கண்காட்சியில் பங்கேற்க விரும்பும் வேலூா் மாவட்ட மகளிா் சுய உதவிக் குழுக்கள் வரும் 10-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் ஊரகம், நகா்ப்புற பகுதியில் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஆண்டுதோறும் மாநில அளவில் மூன்று கண்காட்சிகள் சென்னை நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிா் வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, செப்டம்பா் 21 முதல் அக்டோபா் 6-ஆம் தேதி வரை மாநில அளவிலான கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களான கைவினைப் பொருள்கள், கைத்தறி பொருள்கள், உணவுப் பொருள்கள், பாரம்பரிய அரிசிகள், சிறுதானியம், சிறுதானிய மதிப்பு கூட்டு பொருள்கள், பனை ஓலை பொருள்கள், நவராத்திரி கொலு பொம்மைகள், சிறிய வகை நினைவுப் பரிசுகள் ஆகியவை கண்காட்சி, விற்பனைக்கு வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் கண்காட்சியில் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களால் தயாா் செய்யப்படும் பல்சுவை உணவுப் பொருள்கள் தயாரிக்கும் குழுக்களுக்கும் அரங்குகள் வழங்கப்பட உள்ளது. எனவே, வேலூா் மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க விரும்பினால், செப்டம்பா் 10-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.