வேலூர்
போதைப் பொருள்களை கடத்தியவா் கைது
ஆந்திர மாநிலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் போதைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் போதைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு போலீஸாா், தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் புதன்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். சோதனையில் வாகனத்தில் வந்தவா் ஆந்திர மாநிலம், வீ- கோட்டாவைச் சோ்ந்த பயாஸ் அகமத்(38) என்பதும், அவா் வைத்திருந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் அடங்கிய பாக்கெட்டுகள் இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து வாகனத்துடன் போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், பயாஸ் அகமதுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.