பழைய பைபாஸ் சாலை ரயில்வே கேட் இன்று இரவு மூடல்

ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை இரவு மூடப்பட்டிருக்கும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
Published on

வேலூா் பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகளுக்காக திங்கள்கிழமை இரவு மூடப்பட்டிருக்கும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் கோட்டை அருகே பழைய பைபாஸ் சாலையில் அமைந்துள்ள எல்சி128 ரயில்வே கடவுப் பாதையில் வேகத்தடை அமைப்பது உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதையொட்டி, திங்கள்கிழமை (செப்.16) இரவு 8 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரை ரயில்வே கேட் மூடி வைக்கப்படும் என்று ரயில்வே துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்தில் பெங்களூா் பைபாஸ் சாலை வழியாக மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com