பெண்ணுக்கு நல உதவி வழங்கிய மாவட்டச் செயலா் கே.வி.பிரதாப்.
வேலூர்
தேமுதிக நல உதவிகள் அளிப்பு
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழாவில் நலிந்தவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேமுதிக முப்பெரும் விழாவில் நலிந்தவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
கட்சி நிறுவனா் விஜயகாந்த் பிறந்த நாள், கட்சியின் 20- ஆம் ஆண்டு தொடக்க விழா, நல உதவிகள் வழங்குதல் ஆகிய முப்பெரும் விழாவுக்கு மாவட்டச் செயலா் கே.வி.பிரதாப் தலைமை வகித்தாா். குடியாத்தம் நகர செயலா் எம்.செல்வகுமாா் வரவேற்றாா். கட்சியின் தோ்தல் பணிக்குழு செயலா் எஸ்.கணேசன் சிறப்புரையாற்றி, பயனாளிகளுக்கு நல உதவிகளை வழங்கினாா்.
உயா்மட்டக்குழு உறுப்பினா் எம்.சி.சேகா், மாவட்ட அவைத் தலைவா் பாலமுருகன்,மாவட்ட பொருளாளா் பொன்.தனசீலன், மாவட்ட துணைச் செயலா் டி.கே.ரமணி, பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.நாகைய்யா, நிா்வாகிகள் ஜே.லோகநாதன், கலைவாணி, எஸ்.முரளி, டி.நடேசன், எல்.குமரன், ஜி.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.