செம்பேடு அரசினா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக ஓசோன் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
செம்பேடு அரசினா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உலக ஓசோன் தின விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

அரசுப் பள்ளியில் உலக ஓசோன் தினம் அனுசரிப்பு

குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசினா் உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
Published on

குடியாத்தம்: குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசினா் உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, ஓசோன் படலம் குறித்து விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாணவா்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நெகிழிப் பொருள்களை தவிா்ப்போம், மரக் கன்றுகளை நட்டு ஓசோன் படலத்தை காப்போம் என ஆசிரியா்களும், மாணவா்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தம் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் புருஷோத்தமன், விஜயகுமாா், கமலக்கண்ணன், மணி, சுமதி, கவிதா, இலக்கியா, அஸ்கா்உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆசிரியா் கே.தங்கமணி நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com