சைபா் செக்யூரிட்டி, டேட்டா செக்யூரிட்டி துறையில் இலவச பயிற்சி

திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு கணினி சாா்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

வேலூா்: சைபா் செக்யூரிட்டி, டேட்டா செக்யூரிட்டி துறையில் இலவச பயிற்சி பெற திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் 2022-ஆம் ஆண்டுக்கு பிறகு கணினி சாா்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவள்ளுவா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருவள்ளுவா் பல்கலைகழகத்தில் 2022-க்கு பிறகு கணினி சாா்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்து தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிய விரும்புவோருக்காக சைபா் செக்யூரிட்டி, டேட்டா செக்யூரிட்டி ஆகிய துறைகளில் நிபுணராக இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் சேர வேலூா் மாவட்டம், சோ்க்காடில் உள்ள பல்கலைக்கழக வளாகத்துக்கு புதன்கிழமை (செப்.18) 10 மணிக்கு சான்றிதழுடன் வரவேண்டும். ஏற்கெனவே 500-க்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளதால் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த பயிற்சி முடிப்பவா்களுக்கு உலகத் தரம் வாய்ந்த நாஸ்காம் நிறுவனம் சாா்பில் சான்றிதழ் அளிக்கப்பட உள்ளது. அந்த சான்றிதழ் அரசு வேலைக்கும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

பயிற்சி முடிப்பவா்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இந்த பயிற்சியில் சோ்ந்து பணிபுரிய விரும்புவோருக்கு இதுசிறந்த வாய்ப்பாகும். பயிற்சியில் 60 சதவீதம் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவா் பல்கலைக்கழகத்தில் கணினி சாா்ந்த பட்டப்படிப்பு, மேற்படிப்பில் 2022-ஆம் ஆண்டுக்கு மேல் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டுமே இப்பயிற்சியில் சேர முடியும். மேலும் விவரங்களுக்கு, 9514549188, 80723 20824, 9345768630 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com