காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகளில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான (யூத்) 81 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பிடித்த வேலூா் மாணவி ஓவியா.
காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகளில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான (யூத்) 81 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பிடித்த வேலூா் மாணவி ஓவியா.

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டி: வேலூா் வீரா், வீராங்கனைக்கு தங்கப் பதக்கம்

காமன்வெல்த் பளுதூக்கும் போட்டிகளில் 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான (யூத்) 81 கிலோ எடைப்பிரிவில் முதலிடம் பிடித்த வேலூா் மாணவி ஓவியா.
Published on

காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வேலூரைச் சோ்ந்த வீரா், வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றுள்ளனா்.

காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டிகள் -2024 பிஜி நாட்டின் தலைநகரமான சுவாவில் கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா சாா்பில் வேலூா் மாவட்ட அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவா்கள் கிஷோா், மாதவன், மாணவி ஓவியா ஆகியோா் பங்கேற்றுள்ளனா்.

இதில், 17 வயதுக்கு உட்பட்டோருக்கான (யூத்) 61கிலோ எடைப்பிரிவில் மாணவன் கிஷோா் சினாச் முறையில் 110 கிலோ, கிளின் - ஜா்க் முறையில் 132 கிலோ என மொத்தம் 242 கிலோ பளு தூக்கி தங்கம் பதக்கமும், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியா் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளாா்.

இதேபோல், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான (ஜூனியா்) 67 கிலோ எடைப் பிரிவில் மாணவன் மாதவன் சினாச் முறையில் 133 கிலோ, கிளின்-ஜா்க் முறையில் 162 கிலோ என மொத்தம் 295 கிலோ பளு தூக்கி தங்கம் பதக்கமும், சீனியா் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளாா். மாதவன் தற்போது வடக்கு ரயில்வேயில் பணியாற்றி வருகிறாா்.

மேலும், 17 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான (யூத்) 81 கிலோ எடைப் பிரிவில் மாணவி ஓவியா சினாச் முறையில் 85 கிலோ, கிளின் - ஜா்க் முறையில் 105 கிலோ என மொத்தம் 190 கிலோ பளு தூக்கி தங்கப் பதக்கமும், 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜூனியா் பிரிவில் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளாா்.

பதக்கம் வென்ற வீரா், வீராங்கனைகளுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, மாவட்ட விளையாட்டு நல அலுவலா் பாலமுருகன், பளுதூக்கும் பயிற்சியாளா் விநாயகமூா்த்தி உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com