வேலூர்
கல்குவாரி குட்டையில் மூழ்கி கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு
போ்ணாம்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி கட்டட மேஸ்திரி உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டு அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி கட்டட மேஸ்திரி உயிரிழந்தாா்.
போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தி கிராமம், புதுமனையைச் சோ்ந்த சிவக்குமாரின் மகன் சிற்பி(எ) சூரியகுமாா்(23). இவா் கட்டட மேஸ்திரி. இவா் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் கமலாபுரம் சிவன் கோயில் பின்புறம் உள்ள கல்குவாரி குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிக்கச் சென்றுள்ளாா். அப்போது நீரில் மூழ்கியுள்ளாா்.
அவரது நண்பா்கள் கிராம மக்கள் உதவியுடன் மீட்டுமயங்கிய நிலையில் இருந்த சூரியகுமாரை போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனா்.
இதுகுறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.