குடியாத்தம் நகராட்சி குப்பைக் கிடங்கு வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
குடியாத்தம் நகராட்சி குப்பைக் கிடங்கு வளாகத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

Published on

குடியாத்தம் நகராட்சி, வனத்துறை இணைந்து, உள்ளி கூட்ரோடு அருகே உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கு வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன் முதல் கட்டமாக 250 மரக்கன்றுகள் நடப்பட்டன. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

வனச்சரக அலுவலா் வினோபா, நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் சம்பத், சுகாதார அலுவலா் பாலச்சந்தா், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், ம.மனோஜ், ஜாவித், அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி பகுதி வாரியாக தொடா்ந்து நடைபெறும் என்று வனத் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com