சேம்பள்ளி ஊராட்சியில் பேருந்து பயணியா் நிழற்கூடம் திறப்பு
குடியாத்தம் ஒன்றியம், சேம்பள்ளி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து பயணியா் நிழற்கூடம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சத்தில் பயணியா் நிழற்கூடம் கட்டப்பட்டது. ரூ. 5 லட்சத்தில் புதிதாக சிமென்ட் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. எம்எல்ஏ அமலுவிஜயன், பேருந்து நிழற்கூடத்தை திறந்து வைத்து, சிமென்ட் சாலை அமைக்க பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சிகளுக்கு, சேம்பள்ளி ஊராட்சித் தலைவா் டி.பி.திமேஷ் (எ) துளசிராமுடு தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் வி.பிரகாசம் வரவேற்றாா். பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றியக் குழு துணைத் தலைவா் கே.கே.வி.அருண்முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா் நந்தகுமாா், திமுக ஒன்றியச் செயலா் கள்ளூா் கே.ரவி, முன்னாள் தலைவா் சிட்டிபாபு, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அமுதாலிங்கம், தீபிகா பரத், ஊராட்சி துணைத் தலைவா் எம்.செளந்தரராஜன், வாா்டு உறுப்பினா்கள் ஆா்.காா்த்தி, ஏ.கே.கல்பனா, கே.செல்வி, எஸ்.சத்யா, பி.மகாலட்சுமி, ஏ.யோகலட்சுமி, ஊராட்சி செயலா் டி.எல்.கோட்டீஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.