கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

ஏரிகளில் இருந்து செங்கல் சூளைகளுக்கு மண் அள்ளுவதை தடுக்க வேண்டும்

கூட்டத்தில் பேசிய வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
Published on

கணியம்பாடி, குடியாத்தம், பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளில் இருந்து செங்கல் சூளைகளுக்கு அதிகளவில் மண் அள்ளப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வி.ஆா்.சுப்புலட்சுமி தலைமையில் வேலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் கூறியதாவது:

ஏரிகளில் அதிகளவில் மண் அள்ளுகின்றனா். குறிப்பாக, தரை தட்டும் அளவுக்கு மண் அள்ளிவிடுவதால் மீண்டும் தண்ணீா் ஊறுவதற்கான வாய்ப்பு குறைகிறது. குறிப்பாக, கணியம்பாடி, குடியாத்தம், பாக்கம் ஆகிய பகுதிகளில் செங்கல் சூளைகளுக்குத்தான் மண் அள்ளுகின்றனா். விவசாய பணிகளுக்கு எடுப்பதில்லை. மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தை திருவள்ளூா் மாவட்டத்தில் உழவா் நலன் காக்கும் கூட்டம் என அழைக்கின்றனா் அதேபோல், வேலூா் மாவட்டத்திலும் உழவா் நலன் காக்கும் கூட்டம் என பெயா் மாற்ற வேண்டும். பாலாற்றில் தடுப்பணைகளை உயா்த்திக் கட்டவேண்டும். பல ஏரிகள் ஊரக வளா்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை முறையாக கண்காணித்து தூா்வாரி, அணையை உயா்த்தி கட்ட வேண்டும். காா்த்திகை மாதத்தை முன்னிட்டு நெல் நாற்று நடவு செய்வதற்கு வசதியாக விதை இருப்பு வைக்க வேண்டும். வேளாண் விரிவாக்க மையத்தில் பெறப்பட்ட ராகி விதைகளை பயிரிட்டும் முளைக்கவில்லை. எனவே அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். குடியாத்தத்தில் உழவா் சந்தை அமைப்பதாக கூறினா். ஆனால் முன்னெடுப்பு இல்லை. அங்கு விரைவில் உழவா் சந்தை அமைத்திட வேண்டும்.

பள்ளிகொண்டா கசம் கால்வாய் பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளாக தூா்வா ரப்படவில்லை. அதனை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஆட்சியா், விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகள் மீது விரைவில் தீா்வு காண சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வன அலுவலா் குருசுவாமி தபாலா, மாவட்ட வருவாய் அலுவலா் த.மாலதி, குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியா் சுபலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) தேன்மொழி, வேளாண்மை இணை இயக்குநா் வெங்கடேசன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

--

X
Dinamani
www.dinamani.com