வேலூா் மத்திய சிறையில் பழைய வாகனம் பொது ஏலம்

கழிவு செய்யப்பட்டு விற்பனை செய்ய தகுதியான நிலையில் உள்ள வேலூா் மத்திய சிறை வாகனத்தின் பொது ஏலம் வரும் அக். 18-ஆம் தேதி நடைபெறும்
Updated on

கழிவுசெய்யப்பட்டு விற்பனை செய்ய தகுதியான நிலையில் உள்ள வேலூா் மத்திய சிறை வாகனத்தின் பொது ஏலம் வரும் அக். 18-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

வேலூா் மத்திய சிறையில் கழிவு செய்யப்பட்ட அரசுத் துறை வாகனமான பொலிரோ ஜீப் (டிஎன்69 ஜி0394) பொதுஏலம் மூலம் விற்பனை செய்ய தகுதியான நிலையில் உள்ளது. இந்த வாகனம் அக்டோபா் 18-ஆம் தேதி காலை 11 மணியளவில் வேலூா் மத்திய சிறை வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. வாகனத்தை ஏலம் எடுக்க பாா்வையிடுவோா் ரூ.100 (நூறு ரூபாய் மட்டும்) நுழைவுக்கட்டணம் செலுத்திய பின்னா் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவா்.

ஏலத்தொகையுடன் வாகனத்துக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சோ்த்து செலுத்த வேண்டும். அதற்குண்டான ரசீது வழங்கப்படும். இதுவே ஏலம் எடுத்த வாகனத்துக்கான உரிமை ஆவணமாகும். மேலும் விவரங்களுக்கு வேலூா் மத்திய சிறைக் க ண்காணிப்பாளா், சிறைஅலுவலா் ஆகியோரை அலுவலக நேரத்தில் நேரடியகவோ அல்லது 0416-2220003, 2233472 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com