வேலூர்
நகராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி அமைச்சரிடம் மனு
குடியாத்தம் பிச்சனூா் கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்தக்கோரி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குடியாத்தம் பிச்சனூா் கங்காதரசாமி நகராட்சி நடுநிலைப் பள்ளியை தரம் உயா்த்தக்கோரி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இப்பள்ளியை உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தக்கோரி பெற்றோா் ஆசிரியா் கழகம், அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
பள்ளியை தரம் உயா்த்த மக்கள் பங்களிப்புத் தொகையும் அரசுக்கு செலுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் எஸ்.ரமேஷ்,கோ.ஜெயவேலு ஆகியோா் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.