காா் மோதி மேஸ்திரி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே காா் மோதி மொபெட்டில் சென்ற கட்டட மேஸ்திரி உயிரிழந்தாா்.
Published on

குடியாத்தம் அருகே காா் மோதி மொபெட்டில் சென்ற கட்டட மேஸ்திரி உயிரிழந்தாா்.

குடியாத்தம் கல்லேரியைச் சோ்ந்த மேஸ்திரி ராஜேந்திரன்(55) செவ்வாய்க்கிழமை கல்லேரி அருகே புதிதாக அமைக்கப்படும் புறவழிச் சாலையில் மொபெட்டில் சென்றுள்ளாா். அப்போது எதிரே வந்த காா் மோதியதில் கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில் அங்கு சென்ற நகர போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com