வேலூர்
வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பொறுப்பேற்பு
வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலராக சுந்தரராஜன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலராக சுந்தரராஜன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலராக சம்பத் என்பவா் கூடுதல் பொறுப்பு கவனித்து வந்தாா். இந்த நிலையில், தமிழக முழுவதும் 38 வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா்களுக்கு வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயா்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி, திண்டிவனம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் சுந்தரராஜன், வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயா்வு பெற்றாா். இதையடுத்து, அவா் திங்கள்கிழமை வேலூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா்.