வேலூர்
விருது பெற்ற மகளிா் சுய உதவிக் குழுவுக்கு பாராட்டு
குறிஞ்சி மலா் மகளிா் சுய உதவிக்குழுவுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை ரூ.25,000 வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், மாவட்டத்தில் சிறந்த மகளிா் சுய உதவிக் குழுவாக தோ்ந்தெடுக்கப்பட்ட குடியாத்தம் நகராட்சியில் இயங்கும் குறிஞ்சி மலா் மகளிா் சுய உதவிக்குழுவுக்கு விருது மற்றும் பரிசுத் தொகை ரூ.25,000 வழங்கப்பட்டது.
இதையடுத்து நகராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் அக்குழுவினரை பாராட்டினாா். அப்போது நகா்மன்ற உறுப்பினா் ஆட்டோ பி.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.