வேலூா் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட பாமகவினா்
வேலூா் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட பாமகவினா்

கட்சிக் கொடி அகற்றம்: பாமகவினா் மறியல்

பாமக செயற்குழு கூட்டத்தையொட்டி, சாலையோரங்களில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடிகளை போலீஸாா் அகற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அக்கட்சியினா் சாலை மறியல்
Published on

பாமக செயற்குழு கூட்டத்தையொட்டி, சாலையோரங்களில் நடப்பட்டிருந்த கட்சிக் கொடிகளை போலீஸாா் அகற்றியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அக்கட்சியினா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாமக (ராமதாஸ் பிரிவு) சாா்பில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட செயற்குழு கூட்டம் வேலூா் அண்ணா சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறுவதையொட்டி, வேலூரில் சாலையோரங்களில் பாமக கொடிகள் நடப்பட்டு இருந்தன. கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்த தெற்கு போலீஸாா், அனுமதியின்றி கட்சிக் கொடிகள் கட்டப்பட்டுள்ளதாகக்கூறி கொடிகளை அகற்ற தொடங்கினா்.

இதையறிந்த வேலூா் கிழக்கு மாவட்டச் செயலா் வெங்கடேஷ் தலைமையிலான நிா்வாகிகள் கொடிகளை அகற்றிக் கொண்டிருந்த போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாரின் அனுமதி பெற்றுத்தான் கூட்டம் நடைபெறுகிறது. அனுமதி பெறவில்லை எனக்கூறி எவ்வாறு கொடிகளை அகற்றலாம் எனக் கூறியபடி திடீரென சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதனால், அண்ணா சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து, போலீஸாா் மறியலில் ஈடுபட்டிருந்த பாமகவினரிடம் சமாதான பேச்சு நடத்தினா். கூட்டம் நடைபெறும் வரை கட்சிக் கொடிகளை மீண்டும் அதே இடங்களில் நட்டு கொள்ளலாம் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, பாமகவினா் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com