வேலூர்
பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் பெங்களூருவைச் சோ்ந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை
வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் பெங்களூருவைச் சோ்ந்த பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது குறித்து வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கா்நாடகா மாநிலம், பெங்களூரு ஜெகதீஷ்வா் நகரை சோ்ந்தவா் விஜயா (55). இவா் வாலாஜாவில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தாா். பின்னா், கடந்த 29-ஆம் தேதி பெங்களூரு செல்வதற்காக பேருந்தில் வேலூா் பழைய பேருந்து நிலையம் வந்தாா்.
பேருந்தில் இருந்து இறங்கி தனது பையில் பாா்த்தபோது அதில் இருந்த 5 பவுன் தங்க நகை, ரூ.2,000 ரொக்கம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து விஜயா வேலூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
