குடியாத்தம் ஒன்றியத்தில் விதைப்பந்து தூவும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.
குடியாத்தம் ஒன்றியத்தில் விதைப்பந்து தூவும் பணியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

குடியாத்தத்தில் விதைப் பந்துகள் தூவும் பணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

குடியாத்தம் ஒன்றியத்தில் விதைப் பந்துகள் தூவும் பணியை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
Published on

குடியாத்தம் ஒன்றியத்தில் விதைப் பந்துகள் தூவும் பணியை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தாட்டிமானப்பல்லி ஊராட்சியில் உள்ள வனப் பகுதியில் விதைப் பந்துகளை தூவி நிகழ்ச்சி நடைபெற்றது. கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், வட்டாட்சியா் கி.பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி.ஹேமலதா,பி.சரவணன், சமூக ஆா்வலா் தினேஷ் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். தொடா்ந்து அங்குள்ள கால்நடை மருத்துவமனையை ஆட்சியா் ஆய்வு செய்தாா். பரதராமி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கும் மதிய உணவை ஆய்வு செய்தாா். பின்னா் குடியாத்தம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.40 கோடியில் கட்டப்பட்டு திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் புதிய கட்டடத்தை ஆய்வு செய்தாா். மருத்துவப் பணிகள் இணை இயக்குநா் பியூலா ஆக்னஸ், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் சுடலைமுத்து உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com