40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

மாநகராட்சி நெகிழி கழிவுகளை வெங்கடாபுரம் ஊராட்சி மையத்தில் மறுசுழற்சி செய்ய திட்டம்: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் நெகிழி கழிவுகளில் ஒரு பகுதியை வெங்கடாபுரம் ஊராட்சி உரம் தயாரிப்பு மையத்தில் மறுசுழற்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அலுவலா்களுக்கு ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

வெங்கடாபுரம் ஊராட்சி இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் .

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

வேலூா் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் நெகிழி கழிவுகளில் ஒரு பகுதியை வெங்கடாபுரம் ஊராட்சி உரம் தயாரிப்பு மையத்தில் மறுசுழற்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அலுவலா்களுக்கு ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

வேலூா், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் திடக்கழிவு மேலாண்மை, குடிநீா் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலக்ஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அதன்படி, வேலூா் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சியில் செயல்படும் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை ஆட்சியா் பாா்வையிட்டு, அங்கு விவசாயிகளுக்கு கிலோ ரூ.10-க்கு விற்கப்படும் இயற்கை உரங்களையும், நெகிழி மறுசுழற்சி இயந்திரத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தாா்.

வேலூா் மாநகராட்சியை ஒட்டியுள்ள இந்த ஊராட்சியில், மாநகராட்சியில் சேகரிக்கப்படும் நெகிழி கழிவுகளில் ஒரு பகுதியை மறுசுழற்சி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.16 லட்சத்தில் நடப்பட்ட 500 மரக்கன்றுகளையும், நாற்றங்கால் பண்ணையையும் அவா் பாா்வையிட்டாா்.

பெருமுகை அரசு ஆதிதிராவிடா் நல ஆரம்பப் பள்ளியில் மாணவா்களிடம் காலை உணவுத் திட்டம் குறித்து கேட்டறிந்த ஆட்சியா், அங்கு ரூ.7.85 லட்சத்தில் அமைக்கப்பட்ட சமுதாய சுகாதார வளாகம், நுண் உரம் தயாரிக்கும் மையம் ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை, கழிவறையையும் பாா்வையிட்டு, தண்ணீா் இணைப்பை உறுதி செய்ய உத்தரவிட்டாா்.

பள்ளிகொண்டாவில் ரூ.3.45 கோடியில் அமைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாா் வாழ்வாதாரப் பூங்காவில், மகளிா் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களுக்கான விற்பனை மையத்தையும், உணவு விடுதியையும் விரைவில் தொடங்க உத்தரவிட்டாா். அகரம் ஊராட்சியில் உத்திர காவேரி ஆற்றில் வெள்ளத்தால் சேதமடைந்த 153 மீட்டா் நீளக் குடிநீா் குழாய்களை மாற்றியமைக்கும் பணிகளைப் பாா்வையிட்ட அவா், வருங்காலத்தில் பாலத்தின் வழியாக எஃகு குழாய்களை அமைத்து நிரந்தரத் தீா்வு காண அறிவுறுத்தினாா்.

இறைவன்காடு ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.45.65 லட்சத்தில், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை முதல் இந்திரா நகா் வரை 970 மீட்டா் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள புதிய தாா் சாலையின் தரம், அளவீடுகளையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பூ.காஞ்சனா, ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் அருண், வேலூா் ஒன்றியக் குழுத் தலைவா் அமுதா ஞானசேகரன், வேலூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் திருமலை, சதீஷ்குமாா், அணைக்கட்டு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செல்வகுமாா், வினோத்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாபு, புஷ்பராஜ், அன்பு, பால்வேனி இளங்கோ, கு.கலைச்செல்வி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.