கூக்கல் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

உதகை, டிச. 11: உதகை அருகேயுள்ள கூக்கல் கிராமத்தில் மனுநீதி நாள் கூட்டம் நடைபெற்றது.  நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மனுநீதி நாள் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து துறைகளி
Published on
Updated on
1 min read

உதகை, டிச. 11: உதகை அருகேயுள்ள கூக்கல் கிராமத்தில் மனுநீதி நாள் கூட்டம் நடைபெற்றது.

 நீலகிரி மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மனுநீதி நாள் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து துறைகளின் அரசு அலுவலர்களும் தங்களது துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகளைக் குறித்து விவரித்தனர்.  

  தொடர்ந்து ஊர்மக்கள் சார்பில் ராஜூபெள்ளி, முன்னாள் ஊராட்சித் தலைவர் காமராஜ் ஆகியோர் குடிநீர் பிரச்னை, சாலை வசதி, போக்குவரத்து வசதி மற்றும் வனவிலங்குகளின் தொல்லையிலிருந்து விடுபட மின் வேலி அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

÷இப்பிரச்னைகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

÷ அதன்பின்னர் அவர் பேசியதாவது:

 கிராமப் பகுதிகளிலுள்ள மக்களுக்கு அரசின் நலத் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்பதற்காக அனைத்து துறை அலுவலர்களை வைத்து இத்தகைய முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழக அரசு மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி வருகிறது. அவற்றில் உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை என்பதற்கேற்ப கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கும், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டங்களும், இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு மற்றும் கலைஞர் வீட்டு வசதி திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் வீடுகளும் கட்டித் தரப்படுகிறது.

 அதேபோல, மருத்துவத் துறையின் கீழ் கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முன்பு |3 ஆயிரம், பிரசவத்திற்கு பின் | 3 ஆயிரம், பள்ளி சிறார்களுக்கு கண்ணொளி காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவச கண் கண்ணாடிகளும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆண், பெண் இருபாலருக்கும் சம ஊதியமும் வழங்கப்படுகிறது.

  108 அவசர ஊர்தி மூலம் கூடலூர், பந்தலூர், சுல்தான்பத்தேரி பகுதி மக்களுக்கு அருகாமையிலுள்ள கேரள மாநில மருத்துவமனைகளுக்கு செல்ல அனுமதியும் வழங்கப்படுகிறது. மேலும், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் ஓலைக்கூரையுள்ள அனைத்து வீடுகளையும் காங்கிரீட் வீடுகளாக மாற்றம் செய்ய அரசு ஆணை பிறப்பித்துள்ளதற்கேற்ப மாவட்டத்தில் காங்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.

÷மேலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதிர் கன்னி உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, தேசிய இந்திரா காந்தி விதவையர் உதவித்தொகை, இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கான உதவித்தொகை ஆகியவை வழங்கப்பட்டன.

÷அத்துடன் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு தையல் எந்திரங்களும், மாவட்ட வழங்கல் துறையின் சார்பில் குடும்ப அட்டைகளுமாக மொத்தம் 29 பேருக்கு | 50,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் குணாளன், இலவச வண்ண தொலைக்காட்சிப் பெட்டி தனித்துணை ஆட்சியர் வெங்கடாச்சலம், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com