உடுமலை, டிச. 26: உடுமலை ருத்ரவேணி முத்துசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச கண் சிகிச்சை முகாம் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.
÷கல்லூரி செயலர் கா.சின்னசாமி முகாமை துவக்கி வைத்தார். முதல்வர் ஜி.செல்வ குமார் முன்னிலை வகித்தார். கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் கலைவாணி, நாகபூசன் மற்றும் குழு மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர் களுக்கும் கண் பரிசோதனைகளை செய்தனர்.
இதில் மொத்தம் 935 பேருக்கு பரிசோத னை செய்யப்பட்டதில் 41 பேருக்கு கண் கண்ணாடிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசி ரியர்கள் பி.ராம்பிரசாத், எம்.எஸ்.ஜாபர் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.