தாராபுரம், டிச. 26: அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ள மறியல் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மன்றத்தின் திருப்பூர் மாவட்டச் செயலர் மு.கண்ணன் தாராபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை (டிச. 27) மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு அறிவித்துள்ளது. இந்ப் போராட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் பங்கேற்காது.
ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சு நடத்தி தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ள துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு ஆசிரியர்கள் பெற்றுவரும் ஊதியங்கள், தர ஊதியங்கள், மாநில அரசு ஆசிரியர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.