"மாநில நெடுஞ்சாலைத் துறையால் சாலை விபத்துகள் குறைந்துள்ளன'

வெள்ளக்கோவில், ஜன. 29: தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டால் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குறிப்பிட்டார். ÷திருப்பூ
Published on

வெள்ளக்கோவில், ஜன. 29: தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் செயல்பாட்டால் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குறிப்பிட்டார்.

÷திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே முத்தூரில் ரூ.2 கோடி மதிப்பிலான புதிய உயர் மட்டப் பாலம் கட்டும் பணிகளைத் துவக்கி வைத்தார் (படம்). மேலும் அவர் பேசியது:

÷திமுக ஆட்சியில் சாலை, பாலங்கள் போன்ற போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் பெரும்பாலான ஒரு வழிச் சாலைகள் இரு வழிச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.

÷பாலங்கள் அமைக்க அதிக நிதி தேவைப்படுவதால் சற்று காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறைக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.12 ஆயிரத்து 94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,082 பெரிய பாலங்கள், 3,082 சிறு பாலங்கள், 28 ரயில்வே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. தரமான போக்குவரத்து வசதியால் வாகன செலவு, நேரம், விபத்துகள் குறைந்துள்ளன. மாநில நெடுஞ்சாலைத்துறையின் செயல்பாட்டுக்கு உலக வங்கி பாராட்டு தெரிவித்துள்ளது என்றார்.

÷புதிய பாலம் 8.60 மீட்டர் நீளம் கொண்ட 5 கண்களை கொண்டதாகும். 18 அடி அகலம், 18 அடி உயரம் கொண்டது. இரண்டு பக்கமும் மொத்தம் 208 மீட்டர் அளவுடைய அணுகு சாலையும் அமைக்கப்படுகிறது. இப்பாலத்தின் மூலம் சுமார் 50 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

÷திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலைமை வகித்தார். முத்தூர் பேரூராட்சி தலைவர் அ.தேவிஅப்பு, திமுக பேரூர் கழக செயலாளர் வி.ராமசாமி முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மு.நீலமேகம், எஸ்.செல்வம்,டி.சிற்றரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com