காருண்யா பல்கலை.க்கு உணவுச் சான்றிதழ் வழங்கும் உரிமை

கோவை, ஜூலை 3: தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக உணவுத் தரச்சான்றிதழ் வழங்கும் உரிமை, கோவை காருண்யா பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ளது. ÷கோவை காருண்யா பல்கலைக்கழக உணவு தொழில்நுட்பத்துறைக்கு, உணவுப் பொருள்
Published on
Updated on
1 min read

கோவை, ஜூலை 3: தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக உணவுத் தரச்சான்றிதழ் வழங்கும் உரிமை, கோவை காருண்யா பல்கலைக்கழகத்திற்கு கிடைத்துள்ளது.

÷கோவை காருண்யா பல்கலைக்கழக உணவு தொழில்நுட்பத்துறைக்கு, உணவுப் பொருள்களை பரிசோதித்து தர மதிப்பீடு செய்யும் உரிமையை, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சியாக இயங்கும் தேசிய உணவு பரிசோதனை மற்றும் தர மதிப்பீட்டுக் குழு, கடந்த ஜூன் 6-ம் தேதி வழங்கியது.

÷காருண்யா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்கள் நவீனக் கருவிகள் மூலம் உணவுப் பொருள்களில் உள்ள கொழுப்பு அமிலம், அயோடின் அளவு, தாது உப்புகளின் அளவு மற்றும் பெர்ராக்ûஸடு அளவு ஆகியவற்றை துல்லியமாகக் கணக்கிட்டு நுகர்வோருக்கு தரமான, தீங்கு விளைவிக்காத உணவுப் பொருள்களை அடையாளம் காட்ட முடியும்.

÷காருண்யா பல்கலைக்கழகத்தின் உணவுத்தர சான்றிதழ் அளித்த உணவுப் பொருள்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யலாம்.

÷தர மதிப்பீடு செய்யும் உரிமை கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த உணவுத் தொழில்நுட்ப துறை இயக்குனர் ராஜசேகரன், சி.டி.தேவதாஸ், துறை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் பால் அப்பாசாமி, பதிவாளர் ஆனிமேரி பெர்னாண்டஸ் ஆகியோர் வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.