கோத்தகிரி, ஜூலை 3: கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் தனி வட்டாட்சியர் அன்புராஜ் ஆய்வு மேற்கொண்டார் (படம்).
ஒரு சில ரேஷன் கடைகளில் அரிசி குறைவாக, தரமில்லாததாக வழங்குவதாகவும், அரிசியை தவிர வேறு பொருட்கள் இருப்பு இல்லை என்று நியாய விலைக்கடை ஊழியர்கள் கூறுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது.
இந்நிலையில் நியாய விலைக் கடைகளில் முறைகேடு நடப்பதாக தனி வட்டாட்சியருக்கு கிடைத்த தகவலின் பேரில், வட்டாட்சியர் அன்புராஜ் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டு, தரமில்லாத அரிசியை பொதுமக்களுக்கு விநியோகிக்க கூடாது என்றும், அனைத்து ரேசன் கார்டுகளுக்கும் அனைத்துப் பொருட்களும் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.