கோபி, ஜூலை 3: கவுந்தப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார்.
கவுந்தப்பாடி சூரியம்பாளையத்தைச் சேர்ந்தவர் பாலுசாமி (55). இவர் வெள்ளிக்கிழமை எல்.எம்.பாலப்பாளையம் ரேஷன் கடை அருகே சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாலுசாமியை, ஈரோட்டில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.