பவானி, ஜூலை 3: பவானியை அடுத்த சித்தோடு ஆவின் பால்பண்ணையில் மாவட்ட ஆட்சியர் ஆர்.ஆனந்தகுமார் சனிக்கிழமை அதிகாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
÷அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை பொதுமக்களை சந்தித்து குறைகளைக் கேட்ட ஆட்சியர், இரவு அங்குள்ள வனத்துறையினரின் விடுதியில் தங்கினார்.
தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலை பவானி வழியாகச் சென்றபோது, சித்தோடு ஆவின் பால் பண்ணைக்குச் சென்றார்.
÷பால் பண்ணைக்கு அதிகாலையில் சென்ற மாவட்ட ஆட்சியரைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து, பால் வரத்து, விற்பனை, தரம் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை உள்பட பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்தார்.
மேலும், பால் பண்ணை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளை பசுமையாகவும், சுகாதாரமாகவும் வைக்குமாறு பணியாளர்களுக்கு அறுவுறுத்தினார்.