கோவை, ஜூன் 3: சென்னனூர் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கிளையை திறந்துவைத்து 80 நபர்களுக்கு ரூ. 31 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை
வழங்கினார்.
÷தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சென்னனூரில் புதிதாக அமைக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கக் கிளையை தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
÷இவ்வங்கி மூலமாக பயிர்க் கடன், சிறுவணிகக் கடன், கறவைமாடு வாங்க, மளிகைக் கடை ஆரம்பிக்க, மகளிர் சுழல்நிதிக் கடன், மகளிர் சிறுவணிகக் கடன் வியாபாரக் கடன் என 80 நபர்களுக்கு ரூ. 31 லட்சம் மதிப்பில் வங்கிக் கடனுதவிகளை அமைச்சர் வேலுமணி வழங்கினார்.
÷கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.மா.வெள்ளியங்கிரி, துணைப் பதிவாளர் குமரேஸ்வரி, கூட்டுறவு பிரசார அலுவலர் திருமாவளவன், செயலர் ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.