செல்போனுக்கு ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி தொந்தரவு செய்தவர் கைது

கோவை, ஜூலை 3: கோவையில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொந்தரவு செய்தது தொடர்பாக, சமையல்காரர் ரவி (30) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். ÷கோவை, புலியகுளம் சாலை, வி.வி.சி. நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இ
Published on
Updated on
1 min read

கோவை, ஜூலை 3: கோவையில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொந்தரவு செய்தது தொடர்பாக, சமையல்காரர் ரவி (30) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

÷கோவை, புலியகுளம் சாலை, வி.வி.சி. நகரைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் மாநகர காவல் ஆணையாளர் அமரேஷ் புஜாரியை சந்தித்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

÷அதில், தன்னுடைய செல்போனுக்கு அறிமுகம் இல்லாத ஒரு செல்போன் எண்ணில் இருந்து தொடர்ந்து ஆபாசமான எஸ்.எம்.எஸ். வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

÷இதுதொடர்பாக, கோவை மாநகர மத்திய குற்றப் பிரிவு உதவி கமிஷனர் செல்வராஜ் மேற்பார்வையில், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா, சாமிதுரை, கிரேஸ் ஆகியோர் அடங்கிய போலீஸôர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

÷விசாரணையில், சாமிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த ரவி (30) என்பவர்தான் செல்போனில் இருந்து ஆபாச எஸ்.எம்.எஸ்.-களை அனுப்பியது தெரியவந்தது. அவரிடம் இருந்து செல்போன் மற்றும் 18 சிம்கார்டுகளை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.

புகார் தெரிவிக்கலாம்: இதுபோல யாரேனும் செல்போனுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி தொந்தரவு செய்தால், மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை: செல்போனில் ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்புவர்கள் மற்றும் ஆபாசமாகப் பேசுபவர்கள் மீது மொபைல் டிரேக்கிங் தொழில்நுட்பம் மூலம், சம்பந்தப்பட்ட நபர்களைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் அமரேஷ் புஜாரி எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.