மஞ்சூர், ஜூலை 3: நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளி என்சிசி மாணவர்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானமாக அளிக்க உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத் . திட்டனர்.
மஞ்சூர் அருகே உள்ள நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 தமிழ்நாடு தனி அணி என்சிசி அமைப்பின் கீழ் 100 மாணவர்கள் பயிற்சிப் பெற்று வருகின்றனர். இம் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு தலைமையாசிரியர் லட்சுமணன் தலைமை வகித்தார்.
இத்தலார் அரசு மருத்துவமனை மருத்துவர் முருகேசன் கலந்துகொண்டு, மாணவர்களுக்கு உடல் பரிசோதனை செய்ததுடன், ரத்த பரிசோதனைகளை செய்து அதன் பிரிவு குறிப்புகளை வழங்கினார்.
இதையடுத்து அனைத்து என்சிசி மாணவர்களும் தங்களது உடல் உறுப்புகளை தானமாக வழங்குதாக உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டனர். ஆசிரியர்கள் ஹரி, லிங்கன், ரமேஷ்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.
என்சிசி அலுவலர் க.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.