பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

திருப்பூர், ஜூலை 3:   10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ÷தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மறைந்த சங்கத் தலைவர் ஜே.எஸ
Published on
Updated on
1 min read

திருப்பூர், ஜூலை 3:   10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

÷தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் மறைந்த சங்கத் தலைவர் ஜே.எஸ்.சந்தானந்தம் நினைவு நாள் கூட்டம் திருப்பூரில் நடத்தப்பட்டது. சங்கத்தின் கோவை மாவட்ட எம்.ஏ.குப்புசாமி தலைமை தாங்கினார். உடுமலை நிர்வாகி மு.சிவசண்முகம் முன்னிலை வகித்தார்.

÷இதில் 100 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, செங்குந்தர் யோகா மையத்தில் பயிற்சி பெறும் குழந்தைகளின் யோகா நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

÷இதில், கோவை மாவட்ட செயலர் கே.பி.கே.செல்வராஜ், மாவட்ட பொருளாளர் டி.ஏ.துரைசாமி, துணைத்தலைவர் சி.வேலுச்சாமி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.