பவானி, ஜூலை, 3: பவானி மேட்டூர் ரோட்டில் வரதநல்லூரில் உள்ள பவானி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
÷கல்லூரித் தாளாளர் ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். முதல்வர் பி.மெய்வேல் வரவேற்றார். கடந்த ஏப்ரல் 2011 வாரியத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, முதலாமாண்டு சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்கு கல்லூரியின் விதிமுறைகள், பாடத்திட்டம், ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
÷துணைத் தலைவர் சிபி சக்ரவர்த்தி, செயலர் எம்.எம்.சாமி, பொருளாளர் செல்வராஜ், துணைச் செயலர் நித்யகலா மற்றும் மாணவர்களின் பெற்றோர் திரளாகக் கலந்து கொண்டனர்.