காலிங்கராயன் பாசனப் பகுதியில் நெல் சாகுபடி பணிகள் தீவிரம்

ஈரோடு, ஜூலை 9: காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில் முதல் போக நெல் சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.   தமிழக முதல்வர் ஜெயலலிதா, வேளாண் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்
Published on
Updated on
1 min read

ஈரோடு, ஜூலை 9: காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில் முதல் போக நெல் சாகுபடிப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

  தமிழக முதல்வர் ஜெயலலிதா, வேளாண் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த ஆண்டில் 115 லட்சம் டன் உணவுப் பொருள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எந்த ஆண்டும் இல்லாத வகையில், ஜூன் 12-ம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 6-ம் தேதியே மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  பவானி சாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு ஜூன் 19-ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

  காலிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியான ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதிகளில் மஞ்சள் சாகுபடிப் பணிகள் துவங்கியுள்ளன. அதேபோல், முதல்போக நெல் சாகுபடிப் பணிகளும் தற்போது துவங்கியுள்ளன.

  காலிங்கராயன் வாய்க்கால் பகுதியான கருங்கல்பாளையம், வைராபாளையம், கிருஷ்ணம்பாளையம், சுண்ணாம்பு ஓடை, பாலக்காட்டூர், பி.பெ.அக்ரஹாரம், ஆர்.என்.புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வயல்களைத் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

  நெல் நாற்று விடப்பட்டு, நடவு செய்யவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தற்போது வயல்களில் டிராக்டர் வைத்து உழுது வருகின்றனர். அந்தப் பணி முடிந்ததும் நெல் நாற்றுகள் நடவு செய்யப்படும்.   நெல் சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்தும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரங்கள் தேவையான அளவு கிடைப்பதால், விவசாயிகள் சாகுபடிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.