கோவை, ஜூலை 9: கோவையில் இருந்து தில்லி, கோழிக்கோடு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் சிறப்பு கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் இருந்து ஏர்இந்தியா சார்பில் தில்லி, கோழிக்கோடு நகரங்களுக்கு தினசரி விமான சேவை இயக்கப்படுகிறது.
புதுதில்லிக்கு சலுகை:கோவையில் இருந்து புதுதில்லி செல்லும் பயணிகளுக்கு சிறப்பு சலுகை கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 14 நாள்களுக்கு முன்னர் டிக்கெட் பெற்றால் ரூ. 3,772 கட்டண சலுகை பெற முடியும். மறுமார்க்கத்திலும் இந்த கட்டணச் சலுகை பொருந்தும்.
கோழிக்கோடுக்கு டிக்கெட் ரூ. 970: அதேபோல, கோவையில் இருந்து கோழிக்கோடுக்கு ரூ. 970 சலுகைக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சலுகை மறுமார்க்கத்திலும் பொருந்தும். இந்த கட்டணச் சலுகை செப். 30-ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று, ஏர்இந்தியா நிறுவன மேலாளர் ஆர்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
÷மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்கள்: 0422-239 9822. 239 9833. கால்சென்டர் எண்: 18001 801407.