அவிநாசி, ஜூலை 14: அவிநாசி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டம், அதன் தலைவர் என்.முத்துசாமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மின்வெட்டு, நூல் விலை உயர்வு, விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விசைத்தறி ஜவுளிக்கு தமிழக அரசு வாட் வரி விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட் வரி, ஜவுளி உற்பத்தியாளர்களை மிகவும் பாதிக்கும். அவிநாசி, திருப்பூர், பல்லடம், சூலூர் சட்டப்பேரவை உறுப்பினர்கள், இப் பாதிப்பு குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உயர்த்தப்பட்ட வரியை நீக்க வேண்டும் என, கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சங்க செயலர் சுப்ரமணியம் நன்றி கூறினார்.