அவிநாசி, ஜூலை 14: அவிநாசி கருக்கன்காட்டுப்புதூரில் புதன்கிழமை நடைபெற்ற
மனுநீதி நாள் முகாமில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கஜலட்சுமி வழங்கினார் (படம்).
நடுவச்சேரி ஊராட்சி கருக்கன்காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில், அவிநாசி வட்டாட்சியர் டி.நாகப்பன் வரவேற்றார். மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ராமமூர்த்தி, துணை வட்டாட்சியர் சுப்பிரமணியம், அவிநாசி ஒன்றிய ஆணையர் குட்டிநாடன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் அரசு நலத் திட்டங்கள் குறித்துப் பேசினர்.
18 நபர்களுக்கு குடும்ப அட்டை, பட்டா மாறுதல் உள்ளிட்ட உதவிகளும், 21 நபர்களுக்கு ரூ.3.71 லட்சம் மதிப்பில் திருமண உதவித் திட்டம், விபத்து நிவாரண நிதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நடுவச்சேரி ஊராட்சித் தலைவர் சாந்தாமணி, நடுவச்சேரி விஏஓ செண்பகம், வருவாய் ஆய்வாளர்கள் ஆறுமுகம், சக்திவேல், விஏஓ சிவாஜி, ரங்கசாமி, தனசேகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அவிநாசி வட்ட வழங்கல் அலுவலர் வாணி ஜெயலட்சுமி ஜெகதாம்பாள் நன்றி தெரிவித்தார்.