வால்பாறை, ஜூலை 14: வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
கடந்த மூன்று மாதங்களாக வால்பாறை சட்டப்பேரவைத் தொகுதி அலுவலகம் பூட்டியிருந்த நிலையில், தற்போது மீண்டும் திறக்கப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அதிமுக பேரவைத் தொகுதி செயலாளர் வீ.அமீது திறந்து வைத்தார்.
வால்பாறை எம்.எல்.ஏ மா.ஆறுமுகம், வட்டாட்சியர் சின்னபையன், அதிமுக நகர செயலாளர் மயில்கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.