ஈரோடு, ஜூலை 14: காமராஜர் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டி ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
காமராஜர் தேசிய பேரவை சார்பில் நடைபெற்ற இந்தப் போட்டியை, வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் துவக்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் சேகர் தலைமை வகித்தார்.
இதில், 70 பள்ளிகளைச் சேர்ந்த 250 மாணவ, மாணவியர் கலந்து கொண்டு, காமராஜரின் கல்விப் புரட்சி, சமூகப் புரட்சி உள்ளிட்ட தலைப்புகளில் பேசினர். பேராசிரியர் நாதன் நடுவராகச் செயல்பட்டார். காங்கிரஸ் மாவட்ட முன்னாள் தலைவர் ஆறுமுகம், மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவுச் செயலர் சின்னசாமி, மாவட்டச் செயலர் அக்னி பாலு, நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், கந்தசாமி, சீனிவாசன், கோதண்டபாணி, உழவன் ஜெகதீசன், இளைஞர் சக்தி இயக்கத் தலைவர் பூங்குன்றன் பங்கேற்றனர்.