கோபியில் அரசு பஸ் ஜப்தி

கோபி, ஜூலை 14: விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.   கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (46).   கடந்த
Published on
Updated on
1 min read

கோபி, ஜூலை 14: விபத்தில் காயமடைந்தவருக்கு நஷ்டஈடு வழங்காததால் கோபியில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

  கோவை மாவட்டம், அன்னூர் அருகேயுள்ள ஒட்டர்பாளையம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜன் (46).

  கடந்த 2002 ஆகஸ்டு 5-ம் தேதி அன்னூரிலிருந்து கோபிக்கு மொபட்டில் சென்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சுந்தரராஜன், நஷ்டஈடு வழங்கக்கோரி கோபி சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர், இந்த வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

  இதில், சுந்தரராஜனுக்கு ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 250 நஷ்டஈடு வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

  இதை எதிர்த்து அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில், சுந்தரராஜனுக்கு ரூ.1.50 லட்சம் நஷ்டஈட்டுத் தொகையை, 7.5 சத வட்டி வழங்க உத்தரவிடப்பட்டது.

  எனினும், அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டஈட்டுத் தொகையை வழங்காததால், கோபி விரைவு நீதிமன்றத்தில் சுந்தரராஜன் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார்.

  கோபி விரைவு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் விசாரணை நடத்தி, அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பஸ்ûஸ ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார்.

  இதன்படி, கோபி பஸ் நிலையத்துக்கு புதன்கிழமை மாலை வந்த அரசு பஸ்ûஸ, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து, கோபி நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.