கோவை, ஜூலை 14: பணியிடங்களில் தங்கிப் பணியாற்றாத கிராம நிர்வாக அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாவட்ட ஆட்சியர் எம்.கருணாகரன் எச்சரித்துள்ளார்.
÷இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
÷கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணி கிராமத்திலேயே தங்கிப் பணிபுரிய வேண்டும். ஆனால், சில கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பொறுப்பு கிராமத்தில் தங்கி பணிபுரிவதில்லை என்று மக்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன.
÷கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் தினமும் காலை 10 முதல் பகல் 1 மணி வரை, மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் சான்றுகள் தொடர்பாக உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து அறிக்கை அனுப்பிவைக்க வேண்டும்.
÷அந்தந்த உள்வட்ட வருவாய் ஆய்வாளர்களும் தங்களது அலுவலகத்தில் இருந்து மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
÷தலைமையிடத்தில் தங்கிப் பணிபுரியாத கிராம நிர்வாக அலுவலர்கள் மீது புகார்கள் வந்தாலோ, உயர் அலுவலர்களால் திடீர்த் தணிக்கை மூலம் தவறு கண்டறியப் பட்டாலோ, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.