உடுமலை, ஜூலை 14: உடுமலை, சமயபுரம் ஆயிர வைசியர் சங்கம் சார்பில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
என்.முனிசாமி தலைமை வகித்தார். 10-ம் வகுப்பு, ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பொருளாளர் எம்.தியாகராஜன் பாராட்டிப் பேசினார்.
செயலாளர் எம்.முருகானந்தம், நிர்வாகிகள் ஆர்.தனபால், பி.ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.