கோவை, ஜூலை 14: கோவை, சரவணம்பட்டி மின்நிலையத்தில் அமைந்துள்ள மின் மாற்றிகளில் ஒன்று பழுதாகி உள்ளது.
÷இதனால் சரவணம்பட்டி, கரட்டுமேடு, சிவானந்தபுரம், விளாங்குறிச்சியின் ஒரு பகுதி, ராமகிருஷ்ணபுரம், சின்னவேடம்பட்டி, அம்மன் கோவில், அத்திப்பாளையம் சாலை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை மின் விநியோகம் தடை செய்யப்பட்டது.
÷சுமார் ஒரு வாரத்திற்குள் இந்த பழுதைச் சரிசெய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, மின்மாற்றி பழுது நீக்கும் வரை இப்பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்று கோவை வடக்கு மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.