பொள்ளாச்சி, ஜூலை 14: பி.ஏ பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து நடத்திய ரத்ததான முகாம் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது.
÷ரத்ததான முகாமை கல்லூரியின் தலைவர் பி.அப்புக்குட்டி, முதல்வர் டி.மணிகண்டன், ஒருங்கிணைப்பாளர் ஆர் தேவராஜன், நிர்வாக அலுவலர் ஆர்.பழனிசாமி மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர். சுமார் 400 பேர் கலந்துகொண்ட முகாமில், 100 யூனிட் ரத்தம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.