பல்லடம், ஜூலை 14: பல்லடம், பொங்கலூர் பகுதியில், சித்திரைப் பட்ட வெங்காய அறுவடை துவங்கியுள்ளது.
சின்ன வெங்காய சாகுபடியில் நல்ல விலை கிடைத்து வருவதால் பல்லடம், பொங்கலூர் பகுதி விவசாயிகள் இந்த சாகுபடியில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர். தற்போது அறுவடைக் காலம் என்பதால் கடந்த வாரம் கிலோ 30 ரூபாய்க்கு விற்ற வெங்காயம், வரத்து அதிகரிப்பால் இப்போது கிலோ 25 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தேவை அதிகரித்துள்ளதால் அறுவடை செய்யப்பட்ட உடனேயே காட்டிலேயே வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு விடுகிறது. இன்னும் இரு வாரத்தில் வைகாசிப் பட்ட சின்ன வெங்காய அறுவடை துவங்க இருப்பதால் சின்னவெங்காயம் விலை குறைய வாய்ப்புள்ளது.